கொத்தனார் படுகாயம்
காரைக்காலில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் படுகாயமடைந்தார்.;
கோட்டுச்சேரி
நாகை மாவட்டம் சன்னமங்கலத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 56). இவர் காரைக்காலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில் வாஞ்சூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது காரைக்காலில் இருந்து வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.