அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பிறந்தநாள் விழா

மங்கலம் தொகுதியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update:2022-06-05 23:52 IST

வில்லியனூர்

மங்கலம் தொகுதியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக் குமார் பிறந்தநாள் விழா மங்கலம் தொகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கவுதம் ஏற்பாட்டின் பேரில் வில்லியனூர் ராம பரதேசி கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மங்கலம் தொகுதி மேல் சாத்தமங்கலம் கிராமத்தில் அமைச்சரின் பிறந்த நாளையொட்டி அனைத்து குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதில் அமைச்சரின் அலுவலக உதவியாளர் பழனிநாதன், மேல் சாத்தமங்கலம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் சிவா, ராஜவேலு, பாஸ்கரன், அய்யப்பன், வேல்முருகன், வாழ்முனி கலந்து கொண்டனர்.

கோலப்போட்டி

மங்கலம் கிராமத்தில் ஹெல்த் பவுண்டேசன் இயக்குனர் புவனாகுமார் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கோலப்பட்டியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், தனுசு, வெங்கடாசலம், கர்ணன், பால முருகன், கலியபெருமாள், முருகன், ரஜினி, ஆறுமுகம், மேகநாதன், புருஷோத்தமன், சுந்தரராசு, சிங்காரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.

மங்கலம் தொகுதி வடமங் கலம் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ஏழுமலை, குமார், இளங்கோ, கந்தன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. முன்னதாக தேனியார் ஆட்டோ நிலையம் சார்பில் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்டோ நிலைய நிர்வாகிகள் திருவேங்கடம், பெருமாள், வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்