வீடு புகுந்து பணம், டி.வி. திருட்டு

தவளக்குப்பத்தில் வீடு புகுந்து பணம், டி.வி. திருட்டியவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-06-24 22:54 IST

அரியாங்குப்பம் 

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிசீயன், பிளம்பிங் வேலைகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இதற்காக அவர் தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் பகுதியில் தனியார் குடியிருப்பு முதல் மாடியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த எல்.இ.டி. டி.வி. மற்றும் ரூ.6,300 திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. தொடர்ந்து இதுதொடர்பாக மணிகண்டன் புதுச்சேரி கவர்னர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்களது உத்தரவின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்