மோட்டார் சைக்கிள் திருட்டு
அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
மூலக்குளம்
புதுச்சேரி வேல்ராம்பட்டு திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் கவுதம் (வயது 29). இவர் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று எல்லைபிள்ளைசாவடி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து கவுதம் அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.