மோட்டார் சைக்கிள் திருடன் கைது
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி
உருளையன்பேட்டை லெனின் வீதி செல்லபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்பிரசாத் (வயது32). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அவரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடிச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது புதுசாரம் வேலன் நகர் நேதாஜி வீதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (18) என்பது தெரியவந்தது. அதையடுத்து விக்னேஸ்வரனை உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். விக்னேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.