முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது;

Update:2023-05-27 21:36 IST

பாகூர்

பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை செடல் உற்சவம், காவடி பூஜை, சவப்பாடைசெடல் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பாகூர், குருவிநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்