வீராம்பட்டினம் கடற்கரையில் நாராயணசாமி ஆய்வு
புதுச்சேரியில் மாண்டஸ் புயலையொட்டி வீராம்பட்டினம் கடற்கரையை நாராயணசாமி ஆய்வு செய்தார்.;
புதுச்சேரி
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு வீராபட்டினம் கடற்கரையில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மீனவர் அணி மாநில நிர்வாகி காங்கேயன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.