தைல மரங்கள் வெட்டி சாய்ப்பு
வில்லியனூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த தைல மரங்கள் வெட்டப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வில்லியனூர்
வில்லியனூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த தைல மரங்கள் வெட்டப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தைல மரங்கள்
வில்லியனூர் அருகே பெருங்களூர் தனத்துமேடு பகுதியில் குடுவையாறு ஓடுகிறது. இதன் கரை பகுதியில் புதுவை அரசுக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலான தைலம், காட்டுவாழை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் யாரோ மர்ம ஆசாமிகள் அப்பகுதியில் உள்ள 15 தைல மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். பின்னர் அந்த மரங்களை வாகனங்களில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை விசாரணை
இதை அறிந்த மர்ம ஆசாமிகள், மரங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயன்ற நபர்கள் குறித்து வனத்துறையினர், மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்கள் வெட்டி, கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.