பாண்லே ஊழியர் பலி

புதுவையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பாண்லே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-04-30 23:17 IST

புதுச்சேரி

புதுவை சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது46). பாண்லே ஊழியர். இவர் கடந்த 29-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று தண்டபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தண்டபாணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்