குளம் தூர்வாரும் பணி

புதுவையில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.;

Update:2023-06-07 21:25 IST

வில்லியனூர்

புதுவை மற்றும் காரைக்காலில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அதன்படி, ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பத்தில் குளம் தூர்வாரும் பணி மற்றும் சுய உதவிக் குழுக்களின் நிறுவன நாள் நிகழ்ச்சி நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்துகொண்டு குளத்து பகுதியில் மரக்கன்று நட்டார். பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் துறை செயலாளர் நெடுஞ்செழியன், மாநில திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி வைஷாக் பாகி மற்றும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்