பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

கடல் அாிப்பை தடுக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை நாம் தமிழா் கட்சியினா் முற்றுகையிட்டனா்.;

Update:2023-09-29 21:47 IST

புதுச்சேரி

புதுவை பிள்ளைச்சாவடி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், காலாப்பட்டு பகுதியில் தூண்டில் முள்வளைவு அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்