அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ரங்கசாமி வாழ்த்து

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.;

Update:2022-09-14 22:03 IST

புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கடந்த 8-ந்தேதி பிறந்தநாள் ஆகும். அப்போது அவர் உடல் நலக்குறைவால் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. தற்போது உடல்நலம் சரியாகிவிட்டதால் அரசு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டுள்ளார்.

தொகுதிதோறும் சென்று பிறந்தநாள் விழாவினை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார். இன்று துப்புரவு ஊழியர்களுக்கு அரிசி மற்றும் புடவைகளை வழங்கினார்.

ரங்கசாமி வாழ்த்து

மேலும் பத்ம விருது பெறுவதற்கு புதுவை அரசு சார்பில் பரிந்துரை செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பா.ஜ.க. அலுவலகத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்