ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவையில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்ககோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-08-17 21:11 IST

புதுச்சேரி

புதுவை ரேசன்கடை ஊழியர்களுக்கு 48 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் மாநில அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் எந்தவித பொருட்களும் வழங்கப்படுவதில்லை. தற்போது மத்திய அரசு சார்பில் கொரோனா நிவாரண அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்துடன் இந்த திட்டம் நிறைவடைகிறது.

இதனால் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாத நிலையில் நிலுவை சம்பளம் மற்றும் ரேசன்கடைகளை தொடர்ந்து இயக்ககோரி ஊழியர்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அடுத்தகட்டமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்