சாலை, சுகாதார நிலையம் சீரமைக்கும் பணி

ஊசுடு தொகுதியில் சாலை,சுகாதார நிலையம் சீரமைக்கும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.;

Update:2023-09-23 23:20 IST

வில்லியனூர்

ஊசுடு தொகுதி கோனேரிகுப்பம் சன்னியாசிக்குப்பம் சாலை மற்றும் ரெயில்வே பாலம் சாலை ரூ.80.66 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. அதுபோல சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.24.26 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் சாய்.சரவணன்குமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் சீனிவாசன்ராம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, பா.ஜ.க. ஊசுடு தொகுதி தலைவர் சாய். தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்