சண்டிகேஸ்வரர் சன்னதி கும்பாபிஷேகம்

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரர் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update:2023-02-01 23:29 IST

புதுச்சேரி

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் நடைபெற்ற திருப்பணிகள் முடிந்த நிலையில் வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11 மணியளவில் வேதமந்திரங்கள் முழங்க சன்னதி கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்