அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிற்ப பயிற்சி

புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிற்ப பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-14 16:34 GMT

புதுச்சேரி

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருநாள் சிற்ப பயிற்சி பட்டறை நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி சிற்ப பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் சம்பத் நீஸ் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்