சிறப்பு மருத்துவ முகாம்
புதுவை கண்டமங்கலத்தில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தொற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.;
கண்டமங்கலம்
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபாபு சமுத்திர ஊராட்சியில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தொற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் கண்டமங்கலம் வட்டார மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் துர்க்காதேவி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தனம் அருளரசன், துணைத்தலைவர் லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், ஊராட்சி செயலர் வேல்முருகன், மூட்டு சிகிச்சை மேற்பார்வையாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.