புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
காரைக்கால் அருகே புனித அந்தோணியார் ஆலய தோ்பவனி நடைபெற்றது.;
காரைக்கால்
காரைக்கால் அடுத்த நெடுங்காடு பொன்பேற்றி கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பெரிய தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது.
முன்னதாக தேருக்கு பங்குத்தந்தை ராயப்பன் புனித நீர் தெளித்து மந்திரித்தார். பின்னர் பெரிய தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. விழாவில் காரைக்கால், குரும்பகரம், கோட்டுச்சேரி, தென்னங்குடி ஆகிய ஆலயங்களைச்சேர்ந்த பங்குத்தந்தைகள், பங்கு மக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.