மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-11-25 22:14 IST

புதுச்சேரி

மத்திய பல்கலைக்கழக மானிய குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அர்த்தசாஸ்த்திரம் மற்றும் புராண கதைகள் உள்ளடக்கிய ஜனநாயக கருத்தரங்குகளை நடந்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனை கண்டித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை லாஸ்பேட்டை அரசு பள்ளி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தாகூர் கலைக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் தேவா தலைமை தாங்கினார். மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலர் தேவ.பொழிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு புராண கதைகள் கருத்தரங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்