தணிக்கை அறிக்கை கவர்னரிடம் ஒப்படைப்பு
புதுவை அரசுத்துறைகளின் செலவினங்கள் குறித்து தணிக்கை அறிக்கை புதுவை கவர்னரிடம் ஒப்படைப்பு.;
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளின் செலவினங்கள் குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை புதுவை கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனை முதன்மை ஆடிட்டர் ஜெனரல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த தணிக்கை அறிக்கை அரசுத்துறைகள் செய்த செலவினத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும். புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரின்போது இந்த தணிக்கை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.