ஆதிதிராவிடர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன்

Update:2023-05-12 21:48 IST

புதுச்சேரி

புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகத்தின் மூலம் ஆதிதிராவிட மக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கு திட்டத்தின்கீழ் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 428 பேருக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடன் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரைநிலை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் அசோகன், பொதுமேலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்