தொழிலாளி திடீர் சாவு

மரக்காணத்தில் தொழிலாளி திடீர் மயங்கி விழுந்து இறந்தாா்.;

Update:2022-06-10 23:53 IST

மரக்காணம்

மரக்காணம் சம்புவெளி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 41). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்