தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
புதுச்சேரி
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் புதுவை செவிலிய கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஊர்வலம் கடற்கரை சாலை காந்தி திடலில் நிறைவடைந்தது.