கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுவையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.;
புதுச்சேரி
புதுச்சேரி நூறடி ரோடு அனிதா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த நபரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவர், வண்ணாங்குளத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.