பெண்ணை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர் கைது

வில்லியனூரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-18 18:27 GMT

வில்லியனூர்

வில்லியனூர் வசந்தம் நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் இன்று மாலை அதிரடியாக குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் அறையில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் ஒரு ஜோடி உல்லாசமாக இருந்தது.

பின்னர் அங்கிருந்த 3 பேரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விபசாரத்தில் ஈடுபட்டது கண்டமங்கலத்தை சேர்ந்த 35 வயது பெண் ஆவார். அவரை போலீசார் மீட்டனர். கணவரை பிரிந்து வீட்டுவேலை செய்த அப்பெண்ணிடம், பணஆசை காட்டி வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த சாந்தி (57) என்பவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து வாடகை வீட்டில் விபசார தொழிலை நடத்திய சாந்தி, அழகியுடன் பிடிபட்ட வாடிக்கையாளரான வி.மணவெளியைச் சேர்ந்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்