முதல் மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேற்றிய மீனவர்

2-வது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி, குழந்தைகளை தவிக்க விட்டு வீட்டை விட்டு வெளியேறிய மீனவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-07-21 22:47 IST

அரியாங்குப்பம்

வீராம்பட்டினம் சிவாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கலைஞர் (வயது 40), மீனவர். இவரது மனைவி ஜமுனா (32). இவர்களுக்கு மதிலேஷ் (6) என்ற மகனும், ரசிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கலைஞர், வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு இடையூறாக முதல் மனைவி ஜமுனா மற்றும் குழந்தைகள் இருப்பதாக கூறி, அவர்களை கலைஞர் தரக்குறைவாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜமுனாவின் 25 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அவரையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியேற்றினாராம்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் ஜமுனா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைஞரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்