பெண்ணை தாக்கியவர் கைது

தவளக்குப்பத்தில் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-04 21:48 IST

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் பச்சைவள்ளி (வயது 31). மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (33) என்பவர் தகாத வார்த்தையால் பேசி பச்சைவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவை கல்லால் தாக்கினார். மேலும் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினார். இதுகுறித்து பச்சைவள்ளி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்