முதியவர் மயங்கி விழுந்து சாவு
புதுச்சோியில் தனியார் காப்பகத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவர் மயங்கி விழுந்து இறத்தாா்.;
புதுச்சேரி
புதுவை சாரம் வெங்கடேஸ்வரா நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் ராஜேந்திரன் தோமினிக் (வயது 62). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் ஜோசப் மருத்துவ உதவி கேட்டு விண்ணப்பித்தார். இதையடுத்து பிரெஞ்சு தூதரகம் தனியார் காப்பகத்தில் ஜோசப்பை தங்க வைக்க ஏற்பாடு செய்தது. நேற்று திடீரென அவர் காப்பகத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றவர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜோசப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.