தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

3-வது மாடியில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.;

Update:2022-07-24 22:45 IST

புதுச்சேரி

ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தில்லை மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு வீட்டின் 3-வது மாடியில் ஏறி வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் பக்குவமாக பேசி கீழே இறங்க வைத்தனர்.

விசாரணையில் அவர், சென்னையை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் உணவு கேட்டு அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு போலீசார் உணவு வாங்கி கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்