வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
கோட்டுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
காரைக்கால்
கோட்டுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கதவு உடைப்பு
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி குப்புசெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. அவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி சீதாலட்சுமி வீட்டை பூட்டி சாவியை கணவர் முருகேசனிடம் கொடுத்து விட்டு அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். முருகேசனும் கடந்த 4 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை.
நேற்று காலை சீதாலட்சுமி வீட்டுக்கு வந்தார். பின்னர் கணவரிடம் இருந்து சாவியை வாங்கி வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
6½ பவுன் நகை, பணம் திருட்டு
வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 6½ பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.