மரக்காணத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மரக்காணத்தில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.;

Update:2022-06-15 23:43 IST
மரக்காணத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மரக்காணம்

மரக்காணம் பகுதியில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் இரவு 10 மணி முதல் இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. மரக்காணம், அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, ஆட்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக இதமான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்