காட்சிப் பொருளாக இருந்த போக்குவரத்து சிக்னல் சீரமைப்பு

அரியாங்குப்பத்தில் காட்சிப் பொருளாக இருந்த போக்குவரத்து சிக்னல் சீரமைக்கப்பட்டது.;

Update:2023-07-25 22:48 IST
காட்சிப் பொருளாக இருந்த போக்குவரத்து சிக்னல் சீரமைப்பு

அரியாங்குப்பம்

புதுச்சேரி-கடலூர் சாலையில் அரியாங்குப்பம் கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் காட்சிப்பொருளாக இருந்தது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இந்த போக்குவரத்து சிக்னலை சீரமைக்க கோரி புதுச்சேரி மாநில பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் கடந்த 22-ந்தேதி போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னலை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்