3 மையங்களில் தட்டச்சு தேர்வுகள்

புதுவையில் 3 மையங்களில் தட்டச்சு தேர்வுகள் இன்று நடந்தது.;

Update:2023-08-26 22:33 IST

புதுச்சேரி

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் இன்று தொடங்கின. இந்த தேர்வு புதுவையில் லாஸ்பேட்டை மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக்கல்லூரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடந்தது.

காலை, மாலை என இரு பிரிவுகளாக தமிழ், ஆங்கிலத்தில் தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வுகளில் 3 ஜூனியர் அணிகள், 2 சீனியர் அணிகள் என 2 ஆயிரத்து 600 பேர் கலந்துகொண்டனர். நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்