வள்ளலாரின் அவதார திருநாள்
முதலியார்பேட்டையில் வள்ளலாரின் அவதார திருநாளையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
முதலியார்பேட்டை
வள்ளலாரின் அவதார திருநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை முதலியார்பேட்டை வள்ளலார் மடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் காலை 6 மணி அளவில் அகவல் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8 மணி அளவில் சன்மார்க்க சங்கத்தின் தலைவர் ரத்தினசபாபதி கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் துணை தலைவர் ஞானதுரை, ஓய்வுபெற்ற பேராசிரியர் குழந்தை வேலனார், பாரதிதாசன், மாதவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.