விஷம் தின்று பெண் தற்கொலை
புதுவையில் நோய் காரணமாக விஷம் தின்று பெண் தற்கொலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
மூலக்குளம்
ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் மேரி கிரேசி (வயது 57). இவர் கடந்த சில ஆண்டுகளாக கிட்னி மற்றும் பித்தப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நோய் காரணமாக வலி தாங்காமல் எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கினார். பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.