விஷம் குடித்து பெண் தற்கொலை

காரைக்காலில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.;

Update:2022-09-19 22:34 IST

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திபடுகையை சேர்ந்தவர் கலியபெருமாள். அவரது மனைவி அமுதா (வயது 48). இவர் நீண்ட நாட்ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்து போனார். இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்