திருபுவனை
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டுபாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 56), கூலித்தொழிலாளி. இன்று மாலை மோட்டார் சைக்கிளில் மதகடிப்பட்டு வாரச்சந்தையில் காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பினார்.
புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் திருபுவனை ஏரிக்கரை அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வேன் சக்கரத்தில் சிக்கிய ராமமூர்த்தி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.