தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சிவராமரெட்டி தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-28 23:47 IST

புதுச்சேரி

புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சிவராமரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 8-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வுகள் 5-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரையிலும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) அனைவரும் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்