கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
புதுச்சோியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.;
புதுச்சேரி
புதுச்சேரி ரோடியர் மில் திடலில் உருளையன்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மாட்டிக்கொள்ள மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர்.
விசாரணையில், பிடிபட்டவர் வந்தவாசியை சேர்ந்த அன்புகுமார் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது 10 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த அப்சல், ஆதி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.