தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வில்லியனூர்யில் மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள சிவரந்தகம் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகன். அவரது மனைவி செங்கேணி. இவர்களுக்கு பாண்டியன் (வயது 25) சேரன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சேரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தந்தை அழகன் கண்டித்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேரன் வீட்டில் இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.