மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

ரெட்டியார் பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-21 19:25 IST

மூலக்குளம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் மூலக்குளம் என்ஜினீயர்ஸ் காலனி தண்ணீர் தொட்டி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மரிபியூத் (வயது 19) என்பவர், மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்