ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு - இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு

அண்டோனியோ குட்டரெஸை இந்தியாவில் வரவேற்க ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-14 22:11 IST

Image Courtesy : @DrSJaishankar

வாஷிங்டன்,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்ததாக ‘எக்ஸ்’ தளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் அவரை வரவேற்க ஆர்வமாக காத்திருக்கிறோம் என்றும் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்