மடகாஸ்கர்: அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர்.;

Update:2025-10-17 20:52 IST

அண்டனானரீவோ,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் அதிபராக அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது.

மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு, அதிபராக இருந்த அண்ட்ரேவின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, அண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டு தப்பிச்சென்றார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

இந்நிலையில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய நிலையில் ராணுவத்தின் கெப்செட் பிரிவு தளபதியாக செயல்பட்டு வரும் மைக்கேல் ரைண்டிரினா நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்