தமிழக செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தினத்தந்தி

“ஜனநாயகன்” வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்த தணிக்கை வாரியம்

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து. சுப்ரீம்கோர்ட்டை நாடுவது குறித்து 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

திமுக கூட்டணியில் நிச்சயமாக புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது - கனிமொழி

நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது, அது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார். கருத்து கணிப்புகள் வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.

பல ஆண்டு காலமாக காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நடந்த கொடூரம்: 3 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட பீகார் பெண்ணின் உடல்

சென்னைக்கு வேலைதேடி வந்த பீகார் வாலிபர், மனைவி, குழந்தையோடு கொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு.. நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், தனக்கு விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரோகித் சர்மாவின் உலக சாதனையை உடைத்த அயர்லாந்து கேப்டன்

அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங், ரோகித் சர்மாவின் மிகப்பெரிய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

பிப்ரவரி 5-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

தேர்தல் நெருக்கும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் உள்ளே.. ஓ.பன்னீர்செல்வம் வெளியே..: எடப்பாடி பழனிசாமியின் மாறுபட்ட முடிவுக்கு என்ன காரணம்?

டி.டி.வி.தினகரனையே ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்சை ஏற்க மறுப்பது ஏன்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

டெல்லி சந்திப்பின்போது ராகுல் கேட்டது என்ன?; கனிமொழி சொன்னது என்ன? -பரபரப்பு தகவல்கள்

'ஆட்சியில் பங்கு' விவகாரம் தொடர்பாக, தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

சென்னையில் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் கட்டாயம் - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

மாடுகளுக்கு மைக்ரோசிப் பொறுத்தி, உரிமம் பெறுவது கட்டாயம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

“கோட்சேவின் வாரிசுகளுக்கு பாடம் புகட்டுவோம்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் மகாத்மா காந்தி நிலைத்து வாழ்வார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘விஜய் எங்களை திட்டும்போது நாங்கள் அவரை...’ - செல்லூர் ராஜு பேட்டி

அ.தி.மு.க.வில் சேர்க்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தன்மானம்தான் முக்கியம்; காங்கிரஸ்காரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.

காங்கிரஸ் கட்சிக்கு பூத்களில் நிர்வாகிகள் இல்லை என்பதை ஏற்க முடியாது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

அன்புமணிக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில் பிப்ரவரி 2-வது வாரம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

மோசமான சாதனை...ரோகித், ராகுல் பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா

முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

அஜித் பவாரின் விமானத்தை விமானி சுமித் கபூர், பெண் துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் இயக்கினர்.

‘சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு என்று சொல்வதில் ஒரு கொடிய அச்சுறுத்தல் இருக்கிறது’ - சீமான் ஆவேசம்

பாதுகாப்பற்ற சூழலில் சிறுபான்மை மக்களை வாழ வைத்திருக்கிறீர்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

நாட்டில் வேலைவாய்ப்பு தலைமுறை அதிகரித்து, வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது.

"தலைவர் 173".. ஹாலிவுட் படத்தின் தழுவலா?- வெளியான தகவல்கள்

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

வெனிசுலாவில் தனியார் எண்ணெய் கம்பெனிகளுக்கு அனுமதி - மந்திரிசபை ஒப்புதல்

வெனிசுலா நாட்டின் எண்ணெய் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு - நடிகர் ஜெயராம் வாக்குமூலம்

நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

வாரணாசி-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோவிலில் மகா மகோத்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி வாரணாசி- எர்ணாகுளம் இடையே கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

“திராவிட மாடல் 2.0 அரசு அமைய வேண்டும் என பெண்கள் முடிவு செய்து விட்டனர்” -அமைச்சர் கே.என்.நேரு

2026லும் தி.மு.க. கூட்டணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: எந்தெந்த தொகுதிகளுக்கு..?

6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம் என்ன...?

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.600-ம், பவுனுக்கு ரூ.4 ஆயிரத்து 800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்: டிரோன்கள் பறக்க தடை

சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.30) மற்றும் நாளை (ஜன.31) ஆகிய 2 நாட்கள் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்