இப்படியும் ஒரு உலக சாதனை

அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் டிம் மற்றும் ஜான் குக் ஆகிய இருவரும் விமானத்தில் இருந்து தரையிறங்காமல் நீண்ட நாட்கள் பயணித்ததன் மூலம் வித்தியாசமான உலக சாதனை படைத்தனர்.

Update: 2023-09-24 15:30 GMT

விமானத்துடன் தொடர்புடைய உலக சாதனைகள் ஏராளம் உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் டிம் மற்றும் ஜான் குக் ஆகிய இருவரும் விமானத்தில் இருந்து தரையிறங்காமல் நீண்ட நாட்கள் பயணித்ததன் மூலம் வித்தியாசமான உலக சாதனை படைத்தனர்.

64 நாட்கள், 22 மணி நேரம் மற்றும் 19 நிமிடங்கள் வரை இவர்களது விமான பயணம் நீடித்தது. இந்த சாதனைப் பயணம் 1958-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி முதல் 1959-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதியிலான காலகட்டத்தில் நடந்தது.

நான்கு இருக்கைகள் கொண்ட அந்த சிறிய விமானத்தில் தூங்குவது, சாப்பிடுவது என அனைத்து வேலைகளையும் செய்தனர். அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்கு கூட தரை இறங்கவில்லை. தரையில் இருந்து டிரக் மூலம் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஏற்பாடு செய்துவிட்டனர்.

அப்படி எரிபொருள் நிரப்பும் போது, விமானம் கீழே தாழ்வாக பறந்து வந்து, மிகக் குறைவான வேகத்தில் டிரக்கிற்கு இணையாக பறந்தபடி இருக்கும். அந்த சமயத்தில் டிரக்கில் இருந்து குழாய்களை பயன்படுத்தி விமானத்திற்கு எரிபொருளை நிரப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்