சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2023 1:06 AM IST (Updated: 28 July 2023 1:07 AM IST)
t-max-icont-min-icon

நுண்ணறிவால் செயல்களில் வெற்றி பெறும் சிம்ம ராசி அன்பர்களே!

கனிவான பேச்சு, கருத்துமிக்க செயல்களால் காரியங்களில் வெற்றிபெறும் வாரம் இது. எதிர்பாராத திடீர் பண வரவு ஏற்பட்டாலும், செலவுகள் அதற்குத் தகுந்தபடி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேலைகளில் பொறுப்புடனும், கவனமாகவும் நடந்துகொள்வது நன்மைதரும். சொந்தத் தொழில் செய்பவர்கள், கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், புதிய கிளைகளைத் தொடங்க முயற்சிக்க வேண்டாம். பணத்தை வெளியில் கொண்டு செல்லும் போது பாதுகாப்பாக இருங்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அக்கம் பக்கத்தினருடன் சுமுகமாக பழகுங்கள். கலைஞர்கள், தங்களின் திறமையால் விருதுகளைப் பெறும் நிலைக்கு உயர்வர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story