சிம்மம் - வார பலன்கள்
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
உங்களின் வேகமும், விவேகமும், வாழ்வில் முன்னேற உறுதுணையாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு பெற ஏற்ற தருணம் இது. வியாழக்கிழமை பகல் 12.26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தொழில் செய்பவர்கள், வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்ற வாய்ப்புண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திப்பர். கலைஞர்கள் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள்.
மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதன் மூலம் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவர். பெண்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் குடும்ப நிர்வாகம் சிக்கலின்றி செல்லும். கணவன் - மனைவி உறவு இனிக்கும். உடல்நலக் குறைவு ஏற்பட்டு அகலும். வழக்குகளில் முடிவு கிடைப்பது சிரமம்.
பரிகாரம்:- வியாழக்கிழமை சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.