சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 8:13 PM GMT (Updated: 5 Jan 2023 8:13 PM GMT)

கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு மிகுந்த தொல்லை ஏற்படும் வாரம். என்றாலும் அவை பெருமளவில் பாதிப்பைத் தராது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றமோ, பதவி உயர்வோ கிடைப்பதில் தடங்கல் உண்டாகும். இருப்பினும் அதற்கு இணையான நன்மைகளையும், சலுகைகளையும் பெறுவீர்கள்.

தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு, தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். வருங்காலத்தை கணக்கில் கொண்டு, நிறைய பொருட்களை வாங்கி இருப்பு வைக்க வேண்டாம். கலைஞர்கள், புதிய வாய்ப்புகள் எதையும் இப்போது எதிர்பார்க்க முடியாது.

பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதே நேரம் பணியிலும், குடும்பத்திலும் சில சங்கடங்கள் மனதை வாட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் முடிவாகலாம். ஒரு சிலருக்கு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் நீங்கும்.


Next Story