சிம்மம் - வார பலன்கள்
காரியங்களை குறைவின்றி செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!
புதன் இரவு 8.34 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், இந்த வாரம் வீடு, பூமி போன்ற விஷயத்தில் அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். மனதில் உற்சாகம் குறையலாம். உங்களுக்கு மறைமுகமாக கெடுதல்கள் ஏற்பட்டாலும், நீங்கள் செய்யும் நல்ல காரியங்களால் அவை விலகும். மனதில் உள்ள சங்கடங்கள் விரைவில் ஒவ்வொன்றாக மறையும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். திருமணம் தடைபட்டு வந்த பெண்களுக்கு இப்போது நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண ஏற்பாடுகளில் தாய் வழி உறவினர்கள் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள்.
சிலருக்கு குடியிருக்கும் வீட்டை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.