சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 3 Feb 2023 1:15 AM IST (Updated: 3 Feb 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கலைகளில் ஆர்வம் மிகுந்த சிம்ம ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் இருப்பவர்கள், சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். அலுவலகம் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் சுமுகமாக முடியும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, பணியாளர்களின் ஒத்துழைப்பால் நல்ல லாபம் கிடைக்கலாம். தொழிலை விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான வருமானம் குறையாது. கூடுதல் லாபம் பெற நண்பர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.

கலைஞர்கள், பிரபல நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகளைப் பெற தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் திட்டமிடுவீர்கள்.

வழிபாடு:- சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் வெற்றி வந்துசேரும்.


Next Story